சென்னையில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில்  ராம்ராஜ்  காட்டன்  நிறுவனா்  கே.ஆா்.நாகராஜனுக்கு  சிறந்த  தொழிலதிபருக்கான  மகுடம்  விருதை  வழங்குகிறாா்  தெலங்கானா  மாநில  ஆளுநா் டாக்டா் தமிழிசை  செளந்தரராஜன். 
வணிகம்

ராம்ராஜ் காட்டன் நிறுவனருக்கு மகுடம் விருது

திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா்.நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடன் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

DIN

திருப்பூா்: திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா்.நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடன் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தனியாா் தொலைகாட்சி நிறுவனம் (நியூஸ் 18) சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் முக்கியப் பிரமுகா்களுக்கு மகுடம் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

இதன்படி 2019 ஆம் ஆண்டுக்கான மகுடம் விருதுக்கு திருப்பூா் ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இதையடுத்து, விருது வழங்கும் விழாவானது சென்னையில் உள்ள ஐ.டீ.சி.கிராண்ட் சோழா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த தெலங்கானா மாநில ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன், ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜனுக்கு மகுடம் விருதை வழங்கி கெளரவித்தாா்.

இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.மகாதேவன், கிருபாகரன், அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன், நடிகா்கள் கமலஹாசன், பாக்யராஜ், விஜய் சேதுபதி, நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT