வணிகம்

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக குறைந்தது

நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்தது.

DIN


நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்தது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
தயாரிப்புத் துறையில் காணப்பட்ட மந்த நிலையால் கடந்த ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக குறைந்தது. 
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி முந்தைய ஜூன் மாதத்தில் 1.2 சதவீதமாகவும், மே மாதத்தில் 4.6 சதவீதமாகவும் காணப்பட்டது.  கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தொழில்துறையின் வளர்ச்சி 6.5 சதவீதமாக அதிகரித்திருந்தது. 
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத கால அளவில் தொழில்துறை உற்பத்தி 3.3 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் காணப்பட்ட 5.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும்.
தயாரிப்புத் துறையில் நிலவும் மந்த நிலையை தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் அத்துறையின் உற்பத்தி வளர்ச்சி கடந்தாண்டு ஜூலையில் 7 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஜூலையில் 4.2 சதவீதமாக மட்டுமே இருந்தது.
பொறியியல் சாதனங்கள் பிரிவின் உற்பத்தி  2.3 சதவீத வளர்ச்சி என்ற நிலையிலிருந்து , 7.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டது.
அதேசமயம், சுரங்கத் துறையின் உற்பத்தி 3.4 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக உயர்ந்தது. 
கடந்தாண்டு ஜூலையில் 6.6 சதவீதமாக காணப்பட்ட மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி நடப்பாண்டு ஜூலையில் 4.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT