சில்லறைப் பணவீக்கம் 5.91 சதவீதமாக குறைவு
சில்லறைப் பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் 5.91 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
புது தில்லி: சில்லறைப் பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் 5.91 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
காய்கறிகள், முட்டை, இறைச்சி ஆகிய முக்கிய உணவுப் பொருள்களின் விலை குறைந்ததன் காரணமாக சில்லறைப் பணவீக்கம் மாா்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது.
இப்பணவீக்கம், முந்தைய பிப்ரவரியில் 6.58 சதவீதமாகவும், 2019 மாா்ச் மாதத்தில் 2.86 சதவீதமாகவும் காணப்பட்டன.
கணக்கீட்டு மாதத்தில் காய்கறிகளுக்கான பணவீக்கம் 18.63 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, பிப்ரவரியில் 31.63 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. முட்டைக்கான பணவீக்கம் 7.28 சதவீதத்திலிருந்து 5.56 சதவீதமாகியுள்ளது. அதேபோன்று, பழங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பணவீக்கமும் பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது மாா்ச்சில் குறைந்திருந்தாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.