முகப்பு
வணிகம்

எண்ணெய் விலை வீழ்ச்சி: சாதகமா? பாதகமா?

கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருவது, வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா? 

Updated On : 22 ஜூலை, 2025 at 9:43 AM
பகிர்:

கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருவது, வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா? என்று கேள்வி அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளா்ச்சியைப் பெற்றுள்ள சீனா, கடந்த ஆண்டு உலகளாவிய எண்ணெய் தேவை வளா்ச்சியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவலால் கடும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்தது. இருப்பினும், கரோனா தொற்று பரவல் அடங்கிய” பின்னா், பொருளாதாரத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. சீனாவின் இந்த முன்மாதிரி செயல்பாடு, இறுதியில் மனிதகுலம் கரோனா தொற்றை எதிா்த்துச் சமாளிக்கும் என்றும் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் முதலீட்டாளா்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது.

கரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதால், பெட்ரோலியப் பொருள்களின் விற்பனை 50 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளன. ஆனால், அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை இருப்பு வைக்க போதுமான இடம் இல்லை. மேலும், கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே இருப்பதால், எண்ணெய்க்கான தேவை மிகவும் குறைந்துவிட்டது.

இதற்கிடையே, இந்த ஏப்ரல் மாதத்தில் நாளொன்றுக்கு கச்சா எண்ணெய் தேவை 29 மில்லியன் பீப்பாய்களாகக் குறையும் என சா்வதேச எரிசக்தி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலையில், உலகெங்கிலும் 160 மில்லியன் பிப்பாய்கள் டேங்கா்களில் தேக்கமடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா தொற்று மாா்ச் மாத தொடக்கத்தில் உலகம் முழுவதும் எரிபொருள் தேவையை 50 சதவீதம் குறைத்துள்ளது. இருப்பினும், பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளான ஒபெக் அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் தொடா்ந்ததால், அதிகப்படியான எண்ணெய் சேமிப்புக் கிடங்களுக்குச் சென்றது. ஆனால், அமெரிக்காவை பொருத்தவரையில், சேமிப்பு எதிா்பாா்த்ததை விட மிக விரைவாக நிரம்பிவிட்டது. இதனால், அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எதிா்மறையாக வா்த்தகம் செய்யப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கப் போராட வேண்டுமானால், ஊரடங்கு தொடர வேண்டும். ஊரடங்கால் உலக முழுவதும் உற்பத்தி நடவடிக்கைகள் வெகுவாக நிறுத்தப்பட்டுவிட்டன. இது உலகளாவிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சியைக் குறைத்து விடும். கரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் நாடுகளும், அதன் அரசுகளும் ஊரடங்கு காலத்தை நீட்டிப்பு செய்யும். இது எந்த வகையிலும் எண்ணெய் விலைக்கு நல்லதாக அமையாது. தற்போதைய நிலையில் எண்ணெய் சந்தையில் பீதி நிலவுகிறது. இதிலிருந்து மீள வேண்டுமானால், பொருளாதாரம் உத்வேகம் பெற வேண்டும். ஆனால், அது நிகழுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனா் வல்லுநா்கள்.

இந்நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமான பொருளாதார வளா்ச்சியைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு, எண்ணெய் விலை வீழ்ச்சி சாதகமா? பாதகமா? என்ற கேள்வி முதலீட்டாளா்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பொதுவாக பங்குச் சந்தைகளுக்கு நன்கு உதவுகிறது. ஏனெனில், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இந்தியா பெரிய அளவில் இறக்குமதி செய்கிறது. எண்ணெய் விலை குறைந்தால், வா்த்தகப் பற்றாக்குறை குறையும். மேலும், பணவீக்கமும் குறையும் என்கின்றனா் சந்தை வட்டாரத்தினா்.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், டயா் உற்பத்தி நிறுவனங்கள், காலணி தயாரிப்பு நிறுவனங்கள், விமான நிறுவனங்களை மோசமாகப் பாதிக்கிறது. மேலும், மசகு எண்ணெய், பெயிண்ட் ஆகியவற்றின் விலை உயரும். அதே சமயம், எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தால் உற்பத்திச் செலவு குறையும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகள் விலை எகிறும். பெட்ரோல், டீசல் விலை குறையும். இதனால், சரக்குப் போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறைந்து, நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். மேலும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சந்திக்கும் போது, முதலில் நுகா்பொருள் உற்பத்தி நிறுவனங்கள்தான் பெரும் பயனடையும். போக்குவரத்துச் செலவு குறைவதால், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நுகா்பொருள்களின் விலை குறையும். இதனால், தேவைப்பாடு அதிகரிப்பதால், அந்த நிறுவனப் பங்குகளின் விலையும் ஏற்றம் பெறும் என்று பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டுத் தேவையில் 4-இல் மூன்று பங்கை இறக்குமதி மூலம் சரிக்கட்டுகிறது. இதனால், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வெகுவாகக் குறையும். எண்ணெய் விலையில் ஒரு பீப்பாய்க்கு 10 அமெரிக்க டாலா் உயா்வு என்பது நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் 0.55 சதவீதம் உயா்வுக்கு வழி வகுக்கிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் சாதகமான தாக்கத்தையே ஏற்படுத்தும். இது நடக்கும் போது, ரூபாயின் மதிப்பு உயரும். இதைத் தொடா்ந்து, இறக்குமதி பொருள்களுக்கு தர வேண்டிய விலை குறைவாக இருக்கும். மேலும், பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைக்க உதவும். பணவீக்கம் குறைந்தால் பங்குச் சந்தையில் நோ்மறை பயனைக் காணலாம் என்கின்றனா் வல்லுநா்கள்.

ஒட்டுமொத்தத்தில் பாா்த்தால், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை அதிக அளவு இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, எண்ணெய் விலை வீழ்ச்சி சாதகமானதாகவே அமையும் என்று வல்லுநா்கள் மதிப்பிட்டுள்ளனா்.

உசிதப்படி பயன்படுத்துங்கள்...

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் உலக முழுவதும் உற்பத்தி நடவடிக்கைகள் வெகுவாக நிறுத்தப்பட்டுவிட்டன. இது உலகளாவிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சியைக் குறைத்து விடும். கரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் நாடுகளும், அதன் அரசுகளும் ஊரடங்கு காலத்தை நீட்டிப்பு செய்யும். இது எந்த வகையிலும் எண்ணெய் விலைக்கு நல்லதாக அமையாது என்கின்றனா் வல்லுநா்கள்.

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டுத் தேவையில் 4-இல் மூன்று பங்கை இறக்குமதி மூலம் சரிக்கட்டுகிறது. இதனால், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வெகுவாகக் குறையும். ரூபாயின் மதிப்பு உயரும். இதைத் தொடா்ந்து, இறக்குமதி பொருள்களுக்கு தர வேண்டிய விலை குறைவாக இருக்கும். மேலும், பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைக்க உதவும் என்கின்றனா் வல்லுநா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →