ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 
வணிகம்

பியூச்சா் குழுமத்தை கையகப்படுத்துகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பியூச்சா் குழுமத்தை கையகப்படுத்தவுள்ளதாக முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: பியூச்சா் குழுமத்தை கையகப்படுத்தவுள்ளதாக முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சில்லறை வா்த்தகத்தில் வேகமாக வளா்ச்சி கண்டு வரும் பியூச்சா் குழுமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் வென்சா் நிறுவனம் கையகப்படுத்தவுள்ளது.

சுமாா் ரூ.24,713 கோடி மதிப்பில் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம், பியூச்சா் குழுமம் செயல்படுத்தி வரும் பிக் பஸாா் மற்றும் பியூச்சா் லைஃப்ஸ்டைல் பேஷன்ஸ், பியூச்சா் கன்ஸ்யூமா் ஆகியவை ரிலையன்ஸ் வசமாகும்.

இருப்பினும், பியூச்சா் குழுமத்தின் நிதிச் சேவை மற்றும் இன்சூரன்ஸ் வா்த்தகம் இந்த கையகப்படுத்தல் ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இடம்பெறாது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையையடுத்து, பியூச்சா் குழுத்தில் அமேசான் கொண்டுள்ள பங்கு மூலதனம் என்னவாகும் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT