1000 கோடி மணிநேர பார்வைகளைக் கடந்து யூடியூப் சாதனை 
வணிகம்

1000 கோடி மணிநேர பார்வைகளைக் கடந்து யூடியூப் சாதனை

பிரபல விடியோ தளமான யூடியூபின் விளையாட்டு விடியோக்கள் 1000 கோடி மணிநேரம் பார்வையிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

பிரபல விடியோ தளமான யூடியூபின் விளையாட்டு விடியோக்கள் 1000 கோடி மணிநேரம் பார்வையிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபல விடியோ தளமாக யூடியூப் நிறுவனம் அறியப்பட்டு வருகிறது. பல தலைப்புகளில் விடியோக்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பயனர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் யூடியூப் விளையாட்டு விடியோக்கள் 1000 கோடி மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2018ஆம் ஆண்டில் காணப்பட்ட 400 கோடி மணிநேரத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாகும்.

மொத்தம் காணப்பட்ட 1000 கோடி மணிநேரத்தில் 100 கோடி மணி நேரங்கள் நேரலையில் காணப்பட்டவை என்பது இந்த சாதனையின் சிறப்பம்சமாகும்.

யூடியூப் நிறுவனத்தில் இதுவரை 4 கோடி விளையாட்டு சானல்கள் உள்ளதாகவும், இதில் 80,000 சானல்கள் 1 லட்சம் பயனர்களையும், 1000 சானல்கள் 50 லட்சம் பயனர்களையும், 350 சானல்கள் 1 கோடி பயனர்களையும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 கோடி நேரலை பார்வையாளர்களுடன் மைன்கிராஃப்ட் விடியோ யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு விடியோ எனும் பெருமையைப் பெற்றுள்ளது. அதேபோல் 750 கோடி பார்வைகளுடன் அதிகமுறை பார்க்கப்பட்ட விளையாட்டு விடியோ எனும் சாதனையை ரோப்லோக்ஸ் விடியோ பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT