முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.37,696

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து,

ரூ.37,696-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக,புதன்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.37,696-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6 குறைந்து, ரூ.4,712 ஆக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.72.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.72,200 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,712

1 பவுன் தங்கம்...............................37,696

1 கிராம் வெள்ளி.............................72.20

1 கிலோ வெள்ளி.............................72,200

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,718

1 பவுன் தங்கம்...............................37,744

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000

முழு கட்டுரையைப் படிக்க →