விவோ நிறுவனத்தின் புதிய செல்போன்: ஜன. 2-ல் அறிமுகம் 
வணிகம்

விவோ ஒய்20ஏ ஸ்மார்ட்போன் ஜன. 2-ல் அறிமுகமாகிறது!

புத்தாண்டையொட்டி ஜனவரி 2-ஆம் தேதி விவோ நிறுவனத்தில் புதிய செல்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விவோ நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற Y சீரிஸில் அடுத்ததாக Y20A என்ற மாடல் வெளியாகிறது. 

DIN

புத்தாண்டையொட்டி ஜனவரி 2-ஆம் தேதி விவோவின் புதிய செல்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விவோ தயாரிப்புகளில் பிரபலமான Y சீரிஸில் அடுத்ததாக Y20A என்ற மாடல் வெளியாகிறது. 

சீனாவை தலையிடமாக கொண்ட விவோ நிறுவனம் Y20A என்ற புதிய வகை செல்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் ஜனவரி 2-ஆம் தேதி முதல் அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும், முன்னணி இணைய தள விற்பனை நிறுவனங்களிலும் சந்தைப்படுத்தப்படுகிறது.

இந்த வகை செல்போனில் 17 மணி நேரம் தொடந்து திரைப்படங்களை பார்க்கும் வகையிலும், 10 மணி நேரம் தொடர்ந்து இணைய விளையாட்டுகளில் ஈடுபடும் வகையிலும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000 எம்.ஏ.எச். செயல்திறன் கொண்ட பேட்டரி உள்ளது. 

மேலும், 20:9 என்ற விகிதத்தில் காட்சித்திறன் அனுபவத்தை அளிக்கும் 6.51 அங்குல மேம்பட்ட திரை வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் 3 ஜி.பி. RAM மற்றும் 64 ஜி.பி. சேமிப்புத்திறனும், 13 MP முதன்மை கேமராவும் (3 கேமராக்கள்), 8MP முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவகை செல்போன்களில் பின்புறமிருக்கும் கைரேகை ஸ்கேனர், இந்த வகை செல்போனில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 0.26 வினாடிகளில் செல்போனை அன் - லாக் செய்ய இயலும். இதன் விலை ரூ.11,490-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT