முகப்பு
வணிகம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளை ரூ.70 கோடி நிதியுதவி

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர்(70 கோடி) நன்கொடை அளிக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:46 PM
பகிர்:

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர்(70 கோடி) நன்கொடை அளிக்கிறது.

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 636ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 31,161 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 70 கோடி ரூபாய்) வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அரசாங்கம் மட்டுமின்றி பலதரப்பு நிறுவனங்கள், தனியார் துறைகள் இந்த வைரஸை எதிர்த்து போராடவும், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட குடிமக்களை பாதுகாக்கவும் உதவ வேண்டும். இதற்காக தேவைப்படும் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகளை அளிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பும் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறினார்.

வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமடுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.