வணிகம்

தடகள வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

DIN

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியைச் சேர்ந்த  தடகள வீரர் ஸ்கைலார் ஜோஸ்லின், தனது உயிரை காப்பாற்ற ஆப்பிள் வாட்ச் உதவியதாகக் கூறுகிறார்.

ஆப்பிள் வாட்ச் வாங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில், ஜோஸ்லின் வாட்சில் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. வகுப்பில் அமர்ந்திருந்த அவருக்கு நிமிடத்திற்கு 190 பிபிஎம் என்ற அளவில் இதயத் துடிப்பு அதிகரித்திருப்பதாக செய்தி வந்தது. பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து அவரது இதயத்துடிப்பு 280 பிபிஎம் வரை சென்றது. உடனே, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். 

பின்னர், அவர் எஸ்.வி.டி எனப்படும் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது விரைவான இதயத்துடிப்பை ஏற்படுத்தி காலப்போக்கில் இதயத்தை பலவீனப்படுத்தி முழுவதுமாக செயலிழக்க வைக்கும். 

இதையடுத்து, ஜோஸ்லினுக்கு எட்டு மணி நேர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நலமாக இருக்கிறார். 

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஒரு நிகழ்ச்சியில்தான் ஆப்பிள் வாட்சை பெற்றேன். அதை மாட்டும் வாங்காமல் இருந்திருந்தால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜோஸ்லின். 

இதேபோன்று அமெரிக்க மருத்துவர் ஒருவர், சமீபத்தில் ஒரு உணவகத்திற்குச் சென்றபோது, ஆட்ரியல் ஃபைப்ரிலேஷனைக் கண்டறிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ஐ தனது பயன்படுத்தி ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றினார்.

இங்கிலாந்தில் உள்ள ஒருவர் தனது ஆப்பிள் வாட்ச் மூலமாக இதயத்துடிப்பு குறைவாக இருந்ததை தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றார். இதுபோல இதயத்துடிப்பு தொடர்பாக ஆப்பிள் வாட்ச் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும்  சீரிஸ் 5 இரண்டும் எலக்ட்ரோ கார்டியோகிராம் குறித்து துல்லியமாக அளவிடக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT