அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மிவின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்50 ப்ரோ 5ஜி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மிவின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்50 ப்ரோ 5ஜி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
2020ம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இதனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசசர், அட்ரினோ 650 GPU உடன் ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
6.44 இன்ச் சூப்பர்-அமோல்டு டிஸ்ப்ளே, 20: 9 விகிதத்துடன் உள்ளது. ஆன்லைன் கேம் விளையாடும்போது தொடுதிரை உணர்திறன் மற்றும் மென்மையை மேம்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 64 எம்.பி. குவாட் கேமராவும், முன்பக்கத்தில் இரட்டை கேமராவும் உள்ளன.
பின்புற கேமராக்களில் 20X ஸூம் கேமரா, 12 எம்பி டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்பி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவை அடங்கும். கேமராக்கள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4200 எம்.ஏ.எச் இரட்டை செல் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது.
ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்கள் மற்றும் மூன்று வகைகளில் கிடைக்கும் - ரூ. 37,999 (6 ஜிபி + 128 ஜிபி), ரூ.39,999 (8 ஜிபி + 128 ஜிபி) மற்றும் ரூ.44,999 (12 ஜிபி + 256 ஜிபி) . இந்த ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி டாட் காமில் கிடைக்கிறது.
இந்தியாவில் அறிமுகமானதன் மூலமாக, இந்தியாவின் முதல் 5ஜி, அதிவேக செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி பெற்றுள்ளது.
செயல்திறன், வடிவமைப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் எக்ஸ் 50 புரோ 5 ஜி எதிர்காலத்தில் வாடிக்கையாளரின் முதன்மையான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று ரியல்மி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் கூறுகிறார்.