மார்ச் 5ம் தேதி ரியல்மி பேண்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!
ரியல்மி பேண்ட் ஸ்மார்ட் வாட்ச், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மார்ச் 5ஆம் தேதி ரியல்மி டாட் காமில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி பேண்ட் ஸ்மார்ட் வாட்சுகளைப் போலவே தற்போது ரியல்மி ஸ்மார்ட் வாட்சுகளும் இளைஞர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியல்மி பேண்ட், ஹானர் பேண்ட் 5 யைப் போன்ற ஒரு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். வளைவுத் தன்மையுடன் மூன்று வண்ணங்களில் அறிமுகமாகிறது.
ரியல்மி பேண்ட் இந்தியாவில் மார்ச் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ரியல்மியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தனித்துவமான வண்ணங்களில் அறிமுகமாகும் ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட் மற்ற ஸ்மார்ட் வாட்சுகளைப் போலவே உடற்பயிற்சி தொடர்பான விபரங்களை தரக்கூடியது. இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் திறனையும் கொண்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட்போன்களைப் போன்றே ரியல்மி பேண்டும் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.