வணிகம்

பல வண்ணங்களில் ஸியோமியின் நவீன புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

ஸியோமி நிறுவனம் பல வண்ணங்களில் நவீன புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. 

DIN

ஸியோமி நிறுவனம் பல வண்ணங்களில் நவீன புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. 

ஸியோமி நிறுவனத் தயாரிப்புகளில் ஸ்மார்ட் போன்களைப் போன்று ஸ்மார்ட் வாட்சுகளுக்கும் தற்போதைய இளசுகள் மத்தியில் மவுசு அதிகம்.

ஸியோமி பேண்ட் வாட்சுகள் சமீபத்தில் அதிகம் விற்பனையாகியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக மற்றொரு புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை ஸியோமி அறிமுகப்படுத்த உள்ளது. ஸியோமி பேண்ட் வாட்சுகள் போல் அல்லாமல் புதிய ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவில் முகப்பில் பல்வேறு வண்ண வளையங்களுடன் அறிமுகமாக இருக்கிறது. 

மேலும், 454 x 454 பிக்சல்கள் கொண்ட 1.39 அங்குல டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். வாட்டர் ப்ரூப் வசதி உள்ளது. மற்ற ஸ்மார்ட் வாட்சுகளை போல ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்ட உடல்ரீதியான செயல்களை கண்காணிக்கக் கூடியது. அனைத்து நிலையான உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. கோல்டு, கருப்பு, சில்வர் ஆகிய கலர்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் ஸியோமி புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT