வணிகம்

குறைந்த விலையில் நவீன இயர்போனை அறிமுகப்படுத்தும் ஜீப்ரானிக்ஸ்

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் பிரபல முன்னணி நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் புதிய வடிவில் இயர்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

DIN

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் பிரபல முன்னணி நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய வடிவில் நவீன இயர்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பயணத்தின்போது மிகவும் வசதியாக காதுகளில் பொருந்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் கருப்பு/சிவப்பு காம்போக்களில் கிடைக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்யப்படும் பட்சத்தில் 18 மணிநேரம் சார்ஜ் இருக்கும்.

யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் வசதியும் உள்ளது. பி.டி 5.0 இயர்போன்ககளை மொபைலுடன் இணைத்து உபயோகித்துக்கொள்ளலாம். பாடல்கள் கேட்பது, வாய்ஸ் கால் பேசுவது என அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும். மிகவும் எளிதாக பிளே/ஸ்டாப் செய்யும் வசதி, ஆன்/ஆஃப் செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளது. கூகுள் சர்வீஸ்களையும் எளிதில் பெறும் வசதி உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் செய்யும்போது ஒரே நேரத்தில் பாடல்கள் கேட்டுக்கொண்டே போன் அழைப்புகளையும் பேச முடியும். இரண்டும் சம அளவு ஒலியோடு தெளிவாக இருக்கும்.

வெளியில் செல்லும்போதும், ஓடிக்கொண்டிருக்கும்போதும் எந்தவித வெளிச்சத்தம் குறுக்கீடு இன்றி தெளிவாகக் கேட்கும். நவீனமயமான ஒரு நல்ல இயர்போனை தேடுபவபர்களுக்கு இது திருப்தியைத் தரும் என்று கூறப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் கடைகளிலும் ஆன்லைனில் zebronics.com-லும் இது கிடைக்கிறது. 'ஜீப்ரானிக்ஸ் - சவுண்ட் பாம்ப்'  என்று அழைக்கப்படும் இந்த இயர்போனின் விலை ரூ.2,699 ரூபாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT