வணிகம்

மீண்டும் சந்தைக்கு வருகிறது ஸியோமி மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போன்!

ஸியோமி மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போன்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN


ஸியோமி மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போன்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸியோமியின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர், ரெட்மி குழுவின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை தலைவர் ஆகியோர் கூறுகையில், 'இதுவரை ரெட்மி மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போன்கள் குறைவாகவே தயாரிக்கப்பட்டு வந்தன. விரைவில் மிகப்பெரிய அளவிலான தயாரிப்புக்கு முடிவெடுத்துள்ளோம். எனவே வெகு விரைவிலே மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும்.

ஸியோமி கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் முறையாக மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. தனித்துவமான வடிவமைப்பால் இது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

மிக்ஸ் ஆல்பா 7.82 அங்குல நெகிழ்வான ஓ.எல்.இ.டி திரையைக் கொண்டுள்ளது. இது 2088x2250 பிக்சல் திரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசசர், 12 ஜிபி ரெம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 

கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் எச்.எம்.எக்ஸ் சென்சார் கொண்ட 108 எம்.பி கேமரா, 20 எம்.பி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்.பி கேமரா ஆகியவை அடங்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் முன்பக்க கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 4050mAh பேட்டரியுடன் 40W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

‘40 மாடி கட்டட உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வரும் இஸ்ரோ’

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

SCROLL FOR NEXT