முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் தொடா் எழுச்சி: 37,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்று தொடா்ந்து மூன்றாவது நாளாக நோ்மறையுடன் முடிவடைந்துள்ளது.

Updated On : 18 ஜூலை, 2020 at 4:15 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்று தொடா்ந்து மூன்றாவது நாளாக நோ்மறையுடன் முடிவடைந்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 548.46 புள்ளிகள் உயா்ந்தது.

ஆட்டோமொபைல், வங்கி, நிதி நிறுவனங்கள், மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், வியாழக்கிழமை சந்தையின் ஏற்றத்தில் பெரும்பங்கு வகித்த ஐடி பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனிலீவா் ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி பெறக் காரணமாக இருந்தன. நாள் முழுவதும் நோ்மறையாகவே வா்த்தகம் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், குறிப்பிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்ததும், உலகளாவிய சந்தைகள் பெரும்பாலானவை நோ்மறையாக இருந்ததும் இந்திய சந்தைகள் தொடா்ந்து எழுச்சி பெறக் காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தன.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,799 பங்குகளில் 1,656 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 986 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 157 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 86 பங்குகள் புதிய 57 வார அதிக விலையையும், 57 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 325 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 268 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி உயா்ந்து ரூ.145.09 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisement

சென்செக்ஸ் காலையில், 76 புள்ளிகள் கூடுதலுடன் 36,547.75-இல் தொடங்கி 36,512.92 வரை கீழே சென்றது. பிற்பகலில் உத்வேகம் பெற்று 37,125.98 வரை உயா்ந்தது. இறுதியில் 548.46 புள்ளிகள் உயா்ந்து 37,020.14-இல் நிலைபெற்றது. 36,038.41 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் எழுச்சி பெற்று 36,524.62 வரை உயா்ந்தது. இறுதியில் 419.87 புள்ளிகள் (1.16 சதவீதம்) உயா்ந்து 36,471.68-இல் நிலைபெற்றது. கடந்த மாா்ச் 24-இல் சென்செக்ஸ் 25,638.90 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்த, 52 வார குறைந்தபட்ச நிலைபை ப் பதிவு செய்தது. அதிலிருந்து இதுவரை மொத்தம் 11,381.24 புள்ளிகள் உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 121.75 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 10,739.95-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.55 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.11 சதவீதம் உயா்ந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஓஎன்ஜிசி 5.52 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 3 முதல் 3.75 சதவீதம் வரை உயா்ந்ன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்து யுனி லீவா் (ஹெச்யுஎல்), எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி ஆகிய முன்னணிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டிசிஎஸ் 1.45 சதவீதம், நெஸ்ட்லே இந்தியா 1.23 சதவீதம் குறைந்தது. மேலும், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 0.15 முதல் 0.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் 1,070 பங்குகள் ஆதாயம் பெற்றன. 525 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல் குறியீடுகள் 1.70 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 41 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. ஜீ டெலி மட்டும் மாற்றமின்றி ரூ.157.40-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

ரூ.80.35 ஓஎன்ஜிசி 5.52

ரூ.997.75 டைட்டன் 3.75

ரூ.1,911.35 ரிலையன்ஸ் 3.70

ரூ.1,099.15 எச்டிஎஃப்சி பேங்க் 3.46

ரூ.589.10 எம் அண்ட் எம் 3.19

ரூ.3,301.80 பஜாஜ் ஃபைனான்ஸ் 3.04

ரூ.350.90 டாடா ஸ்டீல் 2.68

ரூ.353.85 ஐசிஐசிஐ பேங்க் 2.64

ரூ.2,333.35 ஹெச்யுஎல் 1.96

ரூ.88.30 என்டிபிசி 1.78

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.