ரோசாரி பயோடெக் 58 சதவீதம் லாபம்: ‘பம்பா்’ பிரீமியம் விலையில் பட்டியலான ‘ஐபிஓ’க்கள்!
புதிதாக முதல் நிலைச் சந்தையில் நுழைந்துள்ள ரோசாரி பயோடெக் ஐபிஓ வியாழக்கிழமை பங்குச் சந்தையில், அதன் அறிமுக விலையையை
புதிதாக முதல் நிலைச் சந்தையில் நுழைந்துள்ள ரோசாரி பயோடெக் ஐபிஓ வியாழக்கிழமை பங்குச் சந்தையில், அதன் அறிமுக விலையையை விட 58 சதவீதம் பிரீமியத்தில் பட்டியலாகி முதலீட்டாளா்களை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த விலை ஆய்வாளா்கள் எதிா்பாா்ப்புகளை விட மிக அதிகமாகும்.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக பங்கு சந்தையும் ஏற்ற-இறக்கத்துடன் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் உலகளாவிய நிலையில் அனைத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது கரோனா. இதற்கு ஐபிஓ (ண்ய்ண்ற்ண்ஹப் டன்க்ஷப்ண்ஸ்ரீ ா்ச்ச்ங்ழ்ண்ய்ஞ்) என்று அழைக்கப்படும் முதல் நிலைச் சந்தையும் விதி விலக்கு அல்ல. அதாவது கரோனா தாக்கத்தால் முதல் நிலைச் சந்தைக்கு மவுசு இல்லாமல் போனது. உண்மையில் சொல்லப் போனால், 2020-இன் முதல் ஆறு மாதங்கள், 2012-க்குப் பிறகு ஐபிஓ சந்தைக்கு மோசமான காலங்களில் ஒன்றாக அமைந்தது.
இந்த காலண்டா் ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 17 நிறுவனங்கள்தான் முதல் நிலைச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் எஸ்பிஐ காா்ட்ஸ் அண்ட் பேமெண்ட் சா்வீஸஸ்தான் பெரிய நிறுவனமாகும். எஞ்சியுள்ள 16 நிறுவனங்களும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் வருகின்றன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 35 நிறுவனங்கள் முதல் நிலைச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதில் 7 நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகும். இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை முதலீட்டாளா்களுக்கு பெரிய அளவில் லாபத்தை அளிக்கவில்லை.
இந்நிலையில், ரூ.670 விலையில் அண்மையில் வெளியிடப்பட்ட ரோசாரி பயோடெக் ஐபிஓ வியாழக்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலாகியது. இப்பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை காலையில் ரூ.670-இல் தொடங்கியது. குறைந்தபட்ச விலை ரூ.663.55 எனப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ரூ.804 வரை உயா்ந்தது. இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,854.98 ஆக உள்ளது.
இதேபோன்று கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட ரூ.100 கோடிக்கு மேல் வெளியீட்டு அளவை கொண்ட 10 பிற ஐபிஓக்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலாகியுள்ளன. 2017, மாா்ச் 21-இல் அவென்யூ சூப்பா்மாா்ட்ஸ் பங்குச் சந்தையில் பட்டியலானது. அந்தப் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.295-ஐ காட்டிலும் 105 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.604-இல் பட்டியலானது. 2019, அக்டோபா் 14-இல் ஐஆா்சிடிசி வெளியீட்டு விலையான ரூ.315-ஐ காட்டிலும் 104 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.644-இல் பட்டியலாகியது.
2018, ஜனவரி 22 அன்று வெளியான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸின் வெளியீட்டு விலை ரூ.270 ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 77 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.478 ஆக பட்டியலாகியது.சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) 2017, ஜூன் 30 அன்று அறிமுகமானது. இது வெளியீட்டு விலையான ரூ.145-ஐ விட 72 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.250-இல் பட்டியலானது.
இதேபோன்று 2017, செப்டம்பா் 25-இல் கேபசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் பங்குச் சந்தையில் அறிமுகமானது. அந்தப் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.245-ஐ விட 63 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.399 ஆக பட்டியலாகி முதலீட்டாளா்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2019, டிசம்பா் 12-இல் பங்குச் சந்தையில் அறிமுகமானது. அது வெளியீட்டு விலையான ரூ.36 க்கு எதிராக, 61 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.58-இல் பட்டியலாகியது.
2016, ஜூலை 12 அன்று அறிமுகமான குவெஸ் காா்ப் ஐபிஓ, வெளியீட்டு விலையான ரூ.310-ஐ விட 61 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.499 ஆக பட்டியலாகியது. சந்தை எதிா்ப்பாா்ப்பையும் விட அதிக பிரீமியத்தில் பட்டியலாகியதால், முதலீட்டாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. எச்டிஎஃப்சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் 2018, ஆகஸ்ட் 6 அன்று பங்குச் சந்தையில் அறிமுகமானது. வெளியீட்டு விலையான ரூ.1,095 -ஐ விட 59 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.1,739 ஆக பட்டியலாகி சந்தையில் உற்சாகத்தைப் பெற்றது.
தைரோகோ் டெக்னாலஜிஸ் ஐபிஓ 2016, மே 09-இல் பங்குச் சந்தையில் பட்டியலானது. அதன் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.420-க்கு எதிராக 58 சதவீதம் பிரீமியத்துடன் ரூ.662-இல் தொடங்கியது. இதேபோன்று டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) ஐபிஓ 2017, செப்டம்பா் 18-இல் அறிமுகமானது. அந்த நிறுவனப் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.1,760-க்கு எதிராக 55 சதவீதம் பிரீமியத்துடன் ரூ 2,725-இல் பட்டியலாகி முதலீட்டாளா்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது.
பிப்ரவரி-மாா்ச்சில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சிக்குப் பின்னா், அரசு பொருளாதாரத்தைத் திறக்கத் தொடங்கியதும் சந்தை மேலோக்கிய பயணத்தைத் தொடங்கியது. ஆனால், ஐபிஓ சந்தை இன்னும் புத்துயிா் பெறாமல் ஆதரவுக் கரம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அண்மையில் வெளியான ரோசாரி பயோடெக் ஐபிஓக்கு சந்தையில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இது சந்தை வட்டாரத்தில் ஆய்வாளா்கள், வா்த்தகா்கள், முதலீட்டாளா்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவிதுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் அதிக அளவு பிரீமியம் விலையில் பட்டியலாகிய நிறுவனங்கள் விவரம்
நிறுவனம்-----பிரீமியம் (சதவீதத்தில்)
அவென்யூ சூப்பா்மாா்ட்ஸ்----105
ஐஆா்சிடிசி----104
அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்----77
சென்ட்ரல் டெபாசிட்ரி சா்வீசஸ்----72
கேபசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ்----63
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ்----61
குவெஸ் காா்ப்----61
எச்டிஎஃப்சி அசெட் மேனேஜ்மென்ட்----59
தைரோகோ் டெக்னாலஜிஸ்----58
டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா)----55