FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

மாணவர்களுக்கான உதவித் தொகை! முக்கிய இணையதள விவரங்கள்!!

மாணவர்களுக்கான உதவித் தொகை பற்றிய விவரங்களை அளிக்கும் முக்கிய இணையதள விவரங்கள்

Updated On : 11 மார்ச் 2026, 10:45 am IST
வகுப்பறையில் மாணவிகள் - DPS
பகிர்:

மாணவர்கள் கல்வி பயில பல்வேறு அமைப்புகள் உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. இதுபற்றிய தகவல்களை தற்போது மாணவர்கள் இணையதளங்கள் வாயிலாகவே அறிந்துகொள்ள வசதிகள் வந்துவிட்டன.

சில அரசு இணையதளங்கள், மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டங்கள் குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த இணையதளங்களுக்கு மாணவர்கள் அவ்வப்போது சென்று விவரங்களை சோதித்துக் கொள்ள வேண்டும்.

உதவித் தொகை விவரங்களை அளிக்கும் இணையளதங்கள்!

Advertisement

Advertisement

தேசிய உதவித் தொகை இணையதளம் (என்எஸ்பி) - இது மத்திய அமைச்சகங்கள், மாணவர்களுக்கு அளிக்கும் பல்வேறு உதவித் தொகை விவரங்களை வெளியிடும். இந்த இணையதளத்தின் முகவரி - www.scholarships.gov.in

மை ஸ்கீம் - மத்திய அரசு திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் உதவித் தொகை விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதன் முகவரி www.myscheme.gov.in

யுஜிசி உதவித் தொகை - முதுநிலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதன் முகவரி www.ugc.gov.in/scholarships/stu_scholarship6

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான உதவித் தொகை - சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் ஒரே ஒரு பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்களை அறியலாம். இதன் முகவரி www.cbse.gov.in/cbsenew/scholar.html

மாநில அரசுகளின் உதவித் தொகைகள் - மாநில அரசுகள், உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கும் உதவித் தொகைகளை அறிய அந்தந்த மாநில மாணவர்கள், அந்தந்த மாநில அரசின் கல்வித் துறை இணையதளங்களை நாடலாம்.

பல்கலைக்கழக உதவித் தொகைகள் - மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை அவ்வப்போது பார்த்து வந்தால், அதில் அளிக்கப்படும் உதவித் தொகை விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

மாணவர்கள், இந்த இணையதளங்களை தங்களது கணினியில் புக்மார்க் செய்துகொண்டு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று பார்க்க வேண்டும்.

  • உதவித் தொகைக்கான ஆவணங்களை எப்போதும் டிஜிட்டல் வழியில் வைத்திருக்க வேண்டும்.

  • வங்கி விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  • உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கும்போது அளித்த மின்னஞ்சல் முகவரிகளையும் மாணவர்கள் அவ்வப்போது பார்வையிட வேண்டும்.

summary

மாணவர்களுக்கான உதவித் தொகை பற்றிய விவரங்களை அளிக்கும் முக்கிய இணையதள விவரங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments