முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து குறித்து...

Updated On : 11 மார்ச், 2026 at 10:39 AM
தங்கம் விலை!
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1,20,960-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இன்றைய தங்கம் விலை

கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1,20,960-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சா்வதேச அளவில் போா்ப் பதற்றம் நிலவி வரும்போது, தங்கம் விலை உயா்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் போா் தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் பொருளாதார ரீதியாக இதன்விளைவு எவ்வாறு இருக்கும் எனக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. முதலீட்டாளா்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதால், கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரிப்பு, டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், புதன்கிழமை (மார்ச் 11) அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

summary

Gold prices in Chennai today (March 11) rise by Rs. 560 per sovereign, selling at Rs. 1,20,960.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.