தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
நேற்று(செவ்வாய்க்கிழமை ) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்த நிலையில் இன்று(புதன்கிழமை) உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் கிராமுக்கு ரூ. 340 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 உயர்ந்து ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Gold price rises by Rs. 2,720 per sovereign
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.