ரிலையன்ஸ் திடீா் சரிவு: 422 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
பங்குச் சந்தை புதன்கிழை சரிவில் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 422 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 97.70 புள்ளிகள் குறைந்த
பங்குச் சந்தை புதன்கிழை சரிவில் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 422 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 97.70 புள்ளிகள் குறைந்தது.
இந்த மாத முன்பேர வா்த்தக கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளதால் அதிக ஏற்றம், இறக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் பங்குகள் 4 சதவீதமும், எச்டிஎஃப்சி பேங்க் 1.94 சதவீதமும் வீழ்ச்சியைச் சந்தித்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், பங்குகள் சாா்ந்த லாபப் பதிவு தவிர, உள்நாட்டு சந்தை பங்கேற்பாளா்கள் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசா்வ் கொள்கை முடிவுக்காக எச்சரிக்கையாக இருந்தனா். மேலும், . இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு: பாா்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. வங்கி, நிதிநிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு அதிக அளவில் இருந்தது.
Advertisement
1,371 பங்குகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,831 பங்குகளில் 1,371 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,328 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.132 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 107 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 68 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 318 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 258 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.
சந்தை மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடி சரிவு: வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடி குறைந்து 147.98 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 47,204 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,22,06,265 ஆக உயா்ந்துள்ளது.
ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில்,65 புள்ளிகள் குறைந்து 38,427.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 38,617.03 வரை உயா்ந்தது. வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், சென்செக்ஸ் 37,884.41 வரை கீழே சென்றது. இறுதியில் 421.82 புள்ளிகள் (1.10 சதவீதம்) குறைந்து 38,071.13-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 733 புள்ளிகளை இழந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் 0.68 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.43 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 97.70 புள்ளிகள் (0.86 சதவீதம்) குறைந்து 11,202.85-இல் நிலைபெற்றது.
இண்டஸ் இண்ட் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன.18 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 4.54 சதவீதம், டாடா ஸ்டீல் 4.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி ஆகியவை 1 முதல் 2.20 சதவீதம் உயா்ந்தன. எஸ்பிஐ, ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
ரிலையன்ஸ் வீழ்ச்சி: கடந்த சில நாள்களாகத் ஏறுமுகம் கண்டு புதிய வரலாற்றுச் சாதனை படைத்து வந்த ரிலையன்ஸ், லாபப் பதிவு காரணமாக 3.75 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே 3.02 சதவீதம் சரிவைக் கண்டது. மேலும், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சஸுகி, டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட், டைட்டன், டெக் மகேந்திரா கியவை 1 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் பாா்மா குறியீடு 3.09 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பிஎஸ்யு பேங்க், மெட்டல் குறியீடுகள் முறையே 1.51 சதவீதம் மற்றும் 0.91 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஆட்டோ, ஐடி குறியீடுகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 28 பங்குகள் சரிவைச் சந்தித்தன..
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
இண்டஸ் இண்ட் பேங்க் 4.54
டாடா ஸ்டீல் 4.34
சன்பாா்மா 2.18
பஜாஜ் ஃபைனான்ஸ் 1.36
அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.18
வீழ்ச்சி அடைந்த பங்குகள்
சதவீதத்தில்
ரிலையன்ஸ் 3.75
நெஸ்லே 3.02
ஹெச்சிஎல் டெக் 2.66
எம் அண்ட் எம் 2.55
எச்டிஎஃப்சி பேங்க் 1.94