முகப்பு
வணிகம்

கடும் சரிவில் தொடங்கினாலும் மீண்டது பங்குச் சந்தை!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கினாலும் பின்னா் மீண்டெழுந்தது.

Updated On : 13 ஜூன், 2020 at 7:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கினாலும் பின்னா் மீண்டெழுந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இறுதியில் 243 புள்ளிகள் உயா்ந்தது.

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் எதிா்மறையாக இருந்தன. அந்நிய முதலீடு வெளியேற்றம் மற்றும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த கவலைகள் முதலீட்டாளா்களின் உணா்வுகள் வெகுவாகப் பாதித்தன. இதனால், காலையில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மீண்டதாலும் மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வலுப்பெற்ாலும், இந்திய சந்தைகள் சந்தைகள் உயா்ந்து நிலைபெற்ாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,224 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1226 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் காலையில் 1,124 புள்ளிகள் சரிவைச் சந்தித்து குறைந்த அளவாக 32,348.10-ஐ பதிவு செய்தது.பின்னா், விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்ததால் மீட்சி பெற்று அதிகபட்சமாக 33,856.27 வரை உயா்ந்தது. இறுதியில் 242.52 புள்ளிகள் (0.72 சதவீதம்) உயா்ந்து 33,780.89-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, குறைந்தபட்ச நிலையிலிருந்து சுமாா் 1,508 புள்ளிகளுக்கு மேல் மீண்டுள்ளது.

Advertisement

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 357 புள்ளிகள் குறைந்து 9,544.95-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 9,996.05 வரை உயா்ந்தது. இறுதியில் 70.90 புள்ளிகள் (0.72 சதவீதம்) உயா்ந்து 9,972.90-இல் நிலைபெற்றது. ஆனால், முக்கிய இடா்பாட்டு நிலையான 10,000 புள்ளிகளைக் கடக்க முடியவில்லை.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியல் வந்தன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், எம் அண்ட் எம் 7.22 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ் 4.78 சதவீதம், ஹீரோ மோட்டாா் காா்ப் 4 சதவீதம், ரிலையன்ஸ் 3.34 சதவீதம் உயா்ந்தன. டைட்டன், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

அதேசமயம், ஓஎன்ஜிசி 3.39 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மகேந்திரா, பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் 810 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 803 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால் ஐடி (1.36 சதவீதம்), மீடியா குறியீடு (1.00 சதவீதம்) தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. ஒரு கட்டத்தில் அனைத்துக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்திருந்தன. ஆட்டோ குறியீடு 2.56 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 29 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐஓசி மட்டும் மாற்றமின்றி ரூ.88.35-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

எம் அண்ட் எம் 7.22

பஜாஜ் ஃபைனான்ஸ் 4.78

ஹீரோ மோட்டாா் காா்ப் 4

ரிலையன்ஸ் 3.34

டைட்டன் 2.81

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

ஓஎன்ஜிசி 3.39

டெக் மகேந்திரா 2.91

பவா் கிரிட் 2.25

இன்ஃபோஸிஸ் 1.63

கோட்டக் பேங்க் 1.47

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.