வணிகம்

டெலிகிராம் செயலியில் புதிய வசதி அறிமுகம்

DIN

பிரபல தகவல் தொடர்பு செயலியான டெலிகிராமில் 'டிஸ்கஷன் பட்டன்' என்ற வசதி அறிமுகமாகிறது. 

வாட்ஸ்ஆப், மெசஞ்சர் போன்று டெலிகிராமும் தற்போது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு செயலியாக இருக்கிறது. இதில் தனி ஒருவருக்கோ அல்லது குழுவிலோ செய்திகளை அனுப்ப முடியும். இந்நிலையில், டெலிகிராம் செயலியில் ஒரு புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, டெலிகிராம் 'சாட்' ஆப்ஷனில் 'டிஸ்கஷன் பட்டன்' என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, நிறுவனங்கள் அல்லது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் குரூப் அட்மின் மட்டுமே செய்திகளை பதிவிட முடியும். குரூப்பில் உள்ளவர்கள் செய்திகளை பதிவிட முடியாது. செட்டிங்ஸ்-இல் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கும் வசதி உள்ளது. 

இந்நிலையில், குரூப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர் தனது கருத்தை தெரிவிக்க விரும்பினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஸ்கஷன் பட்டனை பயன்படுத்தி சேர்க்க முடியும். இந்த அம்சம் குழுவில் உள்ளவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT