முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வர்த்தகம் இன்று உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

Updated On : 4 நவம்பர், 2020 at 10:39 AM
பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)
பகிர்:

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 183.86 புள்ளிகள் உயர்ந்து 40,444. 99 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.46 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49.50 புள்ளிகள் உயர்ந்து 11,863 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சன் பார்மா, டெக் மஹிந்திரா, எச்.சி.எல். மற்றும் டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. மறுபுறம் வங்கித்துறை பங்குகள் பின் தங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.