முகப்பு
வணிகம்

அமெரிக்கத் தேர்தல் எதிரொலி: பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில் மாலையில் வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது.

Updated On : 5 நவம்பர், 2020 at 5:05 PM
அமெரிக்கத் தேர்தல் எதிரொலி: பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் நிறைவு (கோப்புப்படம்)
பகிர்:

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில் மாலையில் வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 724.02 புள்ளிகள் உயர்ந்து 41,340.16 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.78 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211.80 புள்ளிகள் உயர்ந்து 12,120.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.78 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக எஸ்.பி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், இந்துஸ்இந்த் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

நேற்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட இன்போஸிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் சரிவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி., பஜாஜ் ஆட்டோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

இந்தியச் சந்தையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக இன்று இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

இதேபோன்று கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் அமெரிக்கத் தேர்தல் எதிரொலி காரணமாக தற்போது தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.