முகப்பு
டிரம்ப் வென்றதாக வெளியான விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு
வணிகம்

டிரம்ப் வென்றதாக வெளியான விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் கூறும் விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வணிகம்

டிரம்ப் வென்றதாக வெளியான விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் கூறும் விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
டிரம்ப் வென்றதாக வெளியான விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு
பகிர்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் கூறும் விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பிரபல விடியோ தளமான யூடியூப்பில் டிரம்ப் வென்று விட்டதாக தலைப்பிடப்பட்ட விடியோ ஒன்றை டிரம்ப் ஆதரவு குழுவான அமெரிக்கன் நியூஸ் நெட்வொர்க் என்று புதன்கிழமை வெளியிட்டது.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களால் பார்க்கப்பட்ட அந்த விடியோ ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதாகக் கூறி ஜனநாயகக் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த யூடியூப் நிறுவனம் குறிப்பிட்ட அந்த விடியோவில் உள்ளடக்க விதிமுறைகள் மீறப்படவில்லை என்றும், விளம்பர வழிகாட்டுதல்கள் மட்டுமே மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

மேலும் அந்த விடியோவில் உள்ள விளம்பரங்களை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம் அந்த விடியோவை நீக்க மறுப்பு தெரிவித்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →