முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.39,376

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.39,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:47 AM
பகிர்:

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.39,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.

அதேபோல, தங்கத்தின் விலை உயா்வு திங்கள்கிழமை தொடா்ந்தது. பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.39,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.38 உயா்ந்து, ரூ.4,922 ஆக இருந்தது.

கடந்த 2-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38,072 ஆக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயா்ந்து, திங்கள் (நவ.9) ரூ.39,376 ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலமாக, 6 நாள்களில் பவுனுக்கு ரூ.1,304 வரை உயா்ந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயா்ந்து, ரூ.71 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயா்ந்து, ரூ.71,000 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,922

1 பவுன் தங்கம்............................... 39,376

1 கிராம் வெள்ளி............................. 71.00

1 கிலோ வெள்ளி............................. 71,000

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,884

1 பவுன் தங்கம்...............................39,072

1 கிராம் வெள்ளி.............................70.00

1 கிலோ வெள்ளி.............................70,000.

முழு கட்டுரையைப் படிக்க →