வணிகம்

பயனர்களால் கழிக்கப்படும் கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும்: கூகுள் அறிவிப்பு

DIN

கூகுள் சேமிப்பகத்தில் உள்ள கழிக்கப்பட்டக் கோப்புகள் 30 நாள்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும் என்ற அறிவிப்பை கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் டிரைவ் என அழைக்கப்படும் கூகுள் சேமிப்பகம் தங்களது பயனர்களுக்கு கோப்புகளை சேமிக்கும் வசதியை வழங்கி வருகிறது. 

தற்போது, ​​கூகிள் சேமிப்பகத்தில் கழிக்கப்பட்ட கோப்புகளை காலவரையின்றி வைத்திருக்கும் முறை நடைமுறையில் உள்ளது. முன்னதாக கழிக்கப்பட்டக் பகுதியில் உள்ள (ட்ராஸ்) கோப்புகள் பயனரால் காலியாக்கப்படும் வரை காலவரையின்றி தக்கவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்டோபர் 13 முதல், கூகுள் சேமிப்பகத்தில் உள்ள  கழிக்கப்பட்டக் கோப்புகளை அதன் இயங்குதளத்தில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு தானாக நீக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறகடிக்க ஆசை...!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

SCROLL FOR NEXT