முகப்பு
வணிகம்

வர்த்தக ஆண்டின் முதல்நாள்: ஏறுமுகத்தில் சென்செக்ஸ்

வர்த்தக ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 1) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 235 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் உயர்ந்தன. 

Updated On : 1 ஏப்ரல், 2021 at 10:45 AM
கோப்புப்படம்
பகிர்:

வர்த்தக ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 1) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 235 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் உயர்ந்தன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்து 49,680.09 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.35 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 14,759.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.47 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. மீதமுள்ள 6 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அதிகபட்சமாக எச்.சி.எல். டெக் 2.10 சதவிகிதமும், பஜாஜ் ஆட்டோ 1.91 சதவிகிதமும், என்.டி.பி.சி. 1.27 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 1.26 சதவிகிதமும் உயர்ந்து காணப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.