முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 7) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.

Updated On : 7 ஏப்ரல், 2021 at 10:43 AM
கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 7) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 333.24 புள்ளிகள் உயர்ந்து 49,534.63 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.69 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 96.80 புள்ளிகள் உய்ர்ந்து 14,780.30 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.70 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர நிறுவனங்களின் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 2.25 சதவிகிதமும், நெஸ்ட்லே இந்தியா 2.11 சதவிகிதமும், ஆர்.ஐ.எல். 2.08 சதவிகிதமும், எஸ்.பி.ஐ. 1.64 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

குறைந்தபட்சமாக டி.சி.எஸ். -0.45 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி -0.37 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. வங்கி -0.10 சதவிகிதமும், டெக் மஹிந்திரா -0.10 சதவிகிதமும் சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.