சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தை வணிகத்தில் வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் காணப்படுகின்றன. சென்செக்ஸ் 351 புள்ளிகளும், நிஃப்டி 102 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
பங்குச்சந்தை வணிகத்தில் வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
சென்செக்ஸ் 351 புள்ளிகளும், நிஃப்டி 102 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 48,149.96 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.56 சதவிகிதம் உயர்வாகும்.
Advertisement
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102 புள்ளிகள் உய்ர்ந்து 14,387.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.53 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் தர 30 நிறுவனங்களின் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன. மற்ற 8 நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.
அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4.07 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஓ.என்.ஜி.சி 3.67 சதவிகிதமும், பஜாஜ் ஃபின்சர்வ் 3.66 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.71 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.