முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்ததாவது:

உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு கரன்ஸி மதிப்பில் சரிவை உண்டாக்கியது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.23-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.21 வரையிலும், குறைந்தபட்சமாக 74.36 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிவடைந்து 74.35-ஆனது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கடந்த வெள்ளியன்று வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.24-ஆக இருந்தது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,088.32 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய் 69.25 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.37 சதவீதம் குறைந்து 69.25 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →