வீம் மென்பொருள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உலகின் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் இந்தியர்கள் மிகப்பெரிய பதவிகளில் , பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள்.
முக்கியமாக சுந்தர் பிச்சை(கூகுள்), சத்யா நாதெள்ளா (மைக்ரோ சாஃப்ட்), அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்), நிகேஷ் அரோரா(பலோ அல்டொ நெட்வொர்க்ஸ்), சாந்தனு நாராயண்(அடோப்), பரக் அகர்வால்(டிவிட்டர்), லீனா நாயர்(சானல்) வரிசையில் புதிதாக மற்றொரு இந்தியர் இணைந்திருக்கிறார்.
ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ‘வீம் மென்பொருள்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலராக இந்தியர் ஆனந்த் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.