சோனி இந்தியாவுடன் இணைந்தது ’ஜீ' நிறுவனம் 
வணிகம்

சோனி இந்தியாவுடன் இணைந்தது ’ஜீ' நிறுவனம்

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான ’ஜீ என்டர்டைன்மெண்ட்’ சோனி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வகாக இணைந்தது.

DIN

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான ’ஜீ என்டர்டைன்மெண்ட்’ சோனி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வகாக இணைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக ’ஜீ’ குழுமத் தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனிக்கப்படாததால் அந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் ‘ஜீல்’ எனப்படுகிற ’ஜீ’ பங்குகள் கணிசமாக குறையத் தொடங்கியது.

இதனால் பங்குச்சந்தை சரிவையும் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யவும் சோனி இந்தியா நிறுவனத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11,625 கோடிக்கு ஒப்பந்தாமகியிருந்தது ஜீ நிறுவனம். 

தற்போது இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்தாத அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன் படி பங்குச்சந்தையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு , ஓடிடி தளம் ஆகியவைகளில் இக்கூட்டணி சேர்ந்து செயல்பட இருக்கிறது.

புதிய தயாரிப்புகளை மேற்கொள்வதற்காக ஜீ டிவியுடன் சோனி மேக்ஸும் , ஜீ 5 உடன் சோனி லைவ் ஓடிடி தளமும் இணைகிறது. இந்த புதிய கூட்டணிக்கு புனித் கோயங்கா தலைமைச் செயலராக செயல்பட இருக்கிறார்.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமாக சோனி-ஜீ கூட்டணி உருவாகிறது.  இனி லாபத்தில் 49.14 சதவீதம் ஜீ பங்குகளுக்கும் மீதம் இருக்கிற 50.86 சதவீதம் சோனி நிறுவனத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலக்ட்ரீஷியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை

நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

SCROLL FOR NEXT