பங்குச் சந்தையில் புதிய உச்சம்: 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்
பங்குச் சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
பங்குச் சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 3,970 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
பங்குச் சந்தையில் கடந்த இரண்டு நாள்களைத் தொடர்ந்து இன்றும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கிய நிலையில், வர்த்தக நேர முடிவில் 458.03 கூடுதல் பெற்று 50,255.75 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 0.92 சதவிகிதமாகும்.
Advertisement
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.10 புள்ளிகள் கூடுதலுடன் 14,789.95 புள்ளிகளாக இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இது மொத்த வர்த்தகத்தில் 0.97 சதவிகிதமாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றன. அதிகபட்சமாக இந்தஸ் இன்ட் வங்கி 7.65 சதவிகிதமும், பவர்கிரிட் 6.28 சதவிகிதமும், டாக்டர்.ரெட்டிஸ் 3.71 சதவிகிதமும், சன்பார்மா 3.29 சதவிகிதமும், என்.டி.பி.சி. 3.13 சதவிகிதமும் உயர்ந்தன.