முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்: சென்செக்ஸ் 51,000 புள்ளிகளை நெருங்கியது

பங்குச்சந்தை வணிகம் நேற்று சரிவுடன் தொடங்கிய நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை உயர்ந்து 51 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.

Updated On : 5 பிப்ரவரி, 2021 at 9:51 AM
பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்: சென்செக்ஸ் 51,000 புள்ளிகளை நெருங்கியது
பகிர்:

பங்குச்சந்தை வணிகம் நேற்று சரிவுடன் தொடங்கிய நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை உயர்ந்து 51 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 50,979.74 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.72 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.60 புள்ளிகள் உயர்ந்து 14,981.25 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.57 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 நிறுவனங்களில் அதிகபட்சமாக எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகின.

அதிகட்சமாக எஸ்பிஐ வங்கி 12.90 சதவிகிதமும், இந்துஸ் இன்ட் வங்கி 2.80 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.07 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.99 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

நேற்று உயர்ந்து காணப்பட்ட எம்& எம் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.