முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று (பிப்.11) காலை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. எனினும் நிஃப்டி உயர்வு கண்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2021 at 10:35 AM
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்
பகிர்:

பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று (பிப்.11) காலை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. எனினும் நிஃப்டி உயர்வு கண்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.99 புள்ளிகள் சரிந்து 51,262.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 

எனினும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8.00 புள்ளிகள் உயர்ந்து 15,114.50 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.14 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் தொடங்கியுள்ளது.

அதிகபட்சமாக ஆர்ஐஎல் 2.45 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.38 சதவிகிதமும், பவர் கிரிட் 1.21 சதவிகிதமும் உயர்வுடன் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.