முகப்பு
வணிகம்

இந்தியாவில் கால்பதித்த டெஸ்லா நிறுவனம்

பிரபல அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேற்கொள்ளும் விதமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
இந்தியாவில் கால்பதித்த டெஸ்லா நிறுவனம்
பகிர்:

பிரபல அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேற்கொள்ளும் விதமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக அறியப்படுவது டெஸ்லா. இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனராக எலான் மஸ்க் உள்ளார். இந்நிலையில் இந்தியாவில் வாகன உற்பத்தியில் கால் பதிக்கும் முயற்சியாக தனது அலுவலகத்தை பெங்களூருவில் அமைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கான 3 தலைமை இயக்குனர்களை டெஸ்லா நியமித்து டெஸ்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்லாவின் உலகளாவிய மூத்த இயக்குனர் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன், தலைமை கணக்கியல் அதிகாரி வைபவ் தனேஜா மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தொழில்முனைவோர் வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் ஆகியோர் இந்தியப் பிரிவின் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →