முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

Updated On : 20 ஜனவரி, 2021 at 10:34 AM
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)
பகிர்:

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.90 புள்ளிகள் உயர்ந்து 49,558.19 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.36 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.70 புள்ளிகள் உயர்ந்து 14,583.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.43 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

கடந்த சில நாள்களாக சரிவுடன் முடிந்த வர்த்தகம் நேற்று (ஜன.19) உயர்வுடன் முடிந்த நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல்., இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

டெக் மஹிந்திரா 2.27 சதவிகிதமும், ஹெச்.சி.எல் 2.25 சதவிகிதமும், இன்போசிஸ் 2.12 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

என்.டி.பி.சி., ஐ.டி.சி., எச்.டி.எஃப்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.