முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் இன்று (ஜூலை 13) உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்தன.

Updated On : 13 ஜூலை, 2021 at 10:36 AM
பகிர்:


பங்குச்சந்தை வணிகம் இன்று (ஜூலை 13) உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 258.57 புள்ளிகள் உயர்ந்து 52,636.13 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.50 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73.75 புள்ளிகள் உய்ர்ந்து 15,770.10 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.49 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 23 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக என்.டி.பி.சி. 2.84 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.95 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 1.81 சதவிகிதமும், பஜாஜ் ஆட்டோ 1.43 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.