புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்திய கூகுள்
கூகுள் நிறுவனம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட 992 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட 992 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் அவ்வப்போது தனது பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சர்வதேச எமோஜி தினம் இணையத்தில் இன்று அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 992 எமொஜிக்களில் மேலும் மாற்றம் செய்து கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளாவிய பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் துல்லியமானதாகவும், நெகிழ்வு தன்மை கொண்டதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த எமோஜிக்களை ஜிமெயில் மற்றும் கூகுள் சாட் தளத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் இடம்பெறும் எனவும் வாகனங்கள், உணவுகள் இசைக்கருவிகள் என மாற்றம் செய்யப்பட்ட அனைத்துவித எமோஜிக்களும் இந்த மாதத்திலேயே பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.