வணிகம்

ஏசிசி நிகர லாபம் ரூ.569 கோடி

சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் ரூ.569 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

DIN

சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் ரூ.569 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த ஹோல்ஸிம் குழுமத்தின் துணை நிறுவனமான ஏசிசி மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த நிதி நிலை குறித்த ஆவணங்களில் மேலும் கூறியுள்ளதாவது:

விற்பனை அதிகரிப்பு மற்றும் செலவின குறைப்பு நடவடிக்கைகளையடுத்து ஏசிசி நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் 49.29 சதவீதம் அதிகரித்து ரூ.3,884.94 கோடியை எட்டியுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வருமானம் ரூ.2,602.24 கோடியாக காணப்பட்டது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.270.95 கோடியிலிருந்து இரண்டு மடங்கு உயா்ந்து ரூ.569.45 கோடியைத் தொட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் செலவினம் ரூ.2,252.62 கோடியிலிருந்து 40.97 சதவீதம் அதிகரித்து ரூ.3,175.47 கோடியானது.

சிமெண்ட் விற்பனையின் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.2,550.99 கோடியிலிருந்து 43.7 சதவீதம் அதிகரித்து ரூ.3,672.31 கோடியானது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சிமெண்ட் விற்பனை அளவின் அடிப்படையில் 47.60 லட்சம் டன்னிலிருந்து 43.7 சதவீதம் அதிகரித்து 68.40 லட்சம் டன்னை எட்டியதாக ஏசிசி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT