வணிகம்

மொபைல் கேமிங்கில் களமிறங்கும் நெட்பிளிக்ஸ்

DIN

ஓடிடி தளத்தில் கொடிகட்டிப் பறந்து வரும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மொபைல் கேமிங்கை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஓடிடி தளத்தில் 20.9 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள கேமிங்கை தனது ஓடிடி வாடிக்கையாளர்களுக்கு எந்த கட்டணமுமின்றி இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறுகையில்,

முதற்கட்டமாக மொபைல் போன்களுக்கான கேமிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதேபோல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களிலும் கவனம் செலுத்தவுள்ளோம்.  

கரோனா காரணமாக புதிய வாடிக்கையாளர்கள் இணைவதில் கடந்தாண்டை காட்டிலும் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்த உலகளவில் உள்ள சிறந்த கதைகலை கொண்டு வருவதற்கான கவனத்தை தொடர்ந்து செலுத்துவோம்.

நிகழ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். அடுத்த காலாண்டில் 35 லட்சம் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 24 மாதங்களில் 5.4 கோடி வாடிக்கையாளர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதில் 2.7 கோடி வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாதாரர்கள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்விக்கும் யூடியூப், எபிக் கேம்ஸ் மற்றும் டிக்டாக் போன்ற பல நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT