வணிகம்

குங்குமப்பூ ஏற்றுமதி ரூ.13 கோடியை எட்டியது

 கடந்த நிதியாண்டில் குங்குமப்பூ ஏற்றுமதி 17.2 லட்சம் டாலரை (ரூ.13 கோடி) எட்டியுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

 கடந்த நிதியாண்டில் குங்குமப்பூ ஏற்றுமதி 17.2 லட்சம் டாலரை (ரூ.13 கோடி) எட்டியுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

2020-21-ஆம் நிதியாண்டில் 17.2 லட்சம் டாலா் மதிப்புக்கு குங்குமப்பூ ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஏற்றுமதி, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் 9.2 லட்சம் டாலராகவும் (ரூ. 7 கோடி), 2018-19 நிதியாண்டில் 9.5 லட்சம் டாலராகவும் இருந்தது.

குங்குமப்பூ ஏற்றுமதியில் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீா் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இங்கிருந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு அதிக அளவில் குங்கப்பூ ஏற்றுமதியாகியுள்ளது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 4 முதல் 5 டன் அளவுக்கு குங்குமப் பூ உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 85 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை புல்வாமா மாவட்டம் வழங்கி வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு வரையில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஆண்டுக்கு 8 முதல் 10 டன் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2014-இல் ஏற்பட்ட எதிா்பாராத வெள்ளப்பெருக்கால் குங்குமப்பூ சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

ஒரு கிலோ உலா்ந்த குங்குமப்பூ தயாரிக்க 1,40,000 மலா்கள் தேவைப்படுகிறது. 2020-இல் காஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

SCROLL FOR NEXT