கூகுள் போட்டோஸ்: வரம்பற்ற சேமிப்பிற்கு முற்றுப்புள்ளி 
வணிகம்

கூகுள் போட்டோஸ்: வரம்பற்ற சேமிப்பிற்கு முற்றுப்புள்ளி

கூகுள் நிறுவன மென்பொருளான கூகுள் போட்டோஸ் இனி வரம்பற்ற சேமிப்பை வழங்காது என்று அறிவித்துள்ளது.

DIN

கூகுள் நிறுவன மென்பொருளான கூகுள் போட்டோஸ் இனி வரம்பற்ற சேமிப்பை வழங்காது என்று அறிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு வரம்பற்ற சேமிப்புத் திறன் அடிப்படையில் புகைப்படங்கள் சேமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அம்சம் நீடிக்காது என்று கூகுள் அறிவித்துள்ளது.

ஜீன் 1-ம் தேதி முதல் வரம்பற்ற சேமிப்புத் திறனுக்கு கட்டுப்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளது. அதற்கு முன்பு சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கூகுள் டிரைவ் சேமிப்புத் திறனின் அடிப்படையில் மட்டுமே இனி புகைப்படங்கள் சேமிக்கப்படும் என்றும், அதிகமாக நினைவகம் தேவைப்படுவோர் மாதம் 2 டாலர்களை செலுத்தி 100GB நினைவக திறனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10 டாலருக்கு 2TB நினைவகம் வழங்கப்படுகிறது.

நினைவகத்தை சேமித்து வைக்கும் வகையில் தேவையற்ற புகைப்படங்களை நீக்க எளிமையான முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கட்டணமற்ற முறையில் அதிக புகைப்படங்களை சேமித்து வைக்க டிராப் பாக்ஸ் அல்லது ஃபிளிகர் போன்றவற்றை பயன்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. 

கூகுள் மின்னஞ்சலிலிருந்து கூகுள் போட்டோஸ்  நினைவகத்திற்கு  புகைப்படங்களை  நேரடியாக சேமித்து வைக்கும் அம்சத்தை கூகுள் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜல்லிக்கட்டு: முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை! முதல்வரின் அறிவிப்பு குறித்து அமைச்சர் மூர்த்தி

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்: திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்!

எம்ஜிஆருக்கு புகழ் வணக்கம்: தவெக தலைவர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்!

இது ஜனநாயகம் அல்ல; பண நாயகம்: சீமான்

SCROLL FOR NEXT