முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை உயர்வு: சென்செக்ஸ் 260 புள்ளிகள் ஏற்றம்

பங்குச்சந்தை வணிகம் இன்று (ஜூன் 15) காலை முதல் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

Updated On : 15 ஜூன், 2021 at 10:23 AM
பங்குச்சந்தை வணிகம் உயர்வு: சென்செக்ஸ் 260 புள்ளிகள் ஏற்றம்
பகிர்:

பங்குச்சந்தை வணிகம் இன்று காலை (ஜூன் 15) முதல் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 262.68 புள்ளிகள் உயர்ந்து 52,814.21 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.54 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74.60  புள்ளிகள் உய்ர்ந்து 15,886.45 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.50 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்துள்ளன. 

மற்ற 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஏசியன் பெயிண்ட் 2.41 சதவிகிதமும், இந்துஸ்இண்ட் வங்கி 2.41 சதவிகிதமும், ஓஎன்ஜிசி 1.88 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.