முகப்பு
வணிகம்

2025ல் முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 10: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

விண்டோஸின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 10-க்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

விண்டோஸின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும்  மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 10-க்கான ஆதரவை 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. 

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் , ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸை தொடர்ந்து புதுப்பித்து அடுத்தடுத்த வெர்ஷனை அறிமுகப்படுத்தி வருகிறது. 

கடந்த ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10-யை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விண்டோஸின் அடுத்த பதிப்பு வருகிற ஜூன் 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதன் காரணமாக முந்தைய பதிப்பான  விண்டோஸ் 10-க்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி விண்டோஸ் 10 பதிப்பு வருகிற அக்டோபர் 14, 2025 உடன் முடிவுக்கு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →