முகப்பு
வணிகம்

வணிக ரீதியிலான புதிய முயற்சிகள்: பத்திரிகையாளர்களுக்கான கூகுளின் புதிய திட்டம்

பத்திரிகையாளர்கள் வணிக ரீதியிலான புதிய முயற்சிகளை செயல்படுத்த பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
பகிர்:

பத்திரிகையாளர்கள் வணிக ரீதியிலான புதிய முயற்சிகளை செயல்படுத்த பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்து வணிக ரீதியான ஒரு புதிய செயல்திட்டத்தை வைத்திருந்தால் அதற்கு கூகுள் உதவி செய்யத் தயாராக உள்ளது என்று ஜிஎன்ஐ(GNI) ஸ்டார்ட்அப் தொடக்க முகாமின் இயக்குநர் பிலிப் ஸ்மித் கூறினார். 

2021 கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் (GNI) ஸ்டார்ட்அப் தொடக்க முகாமுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்கர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. 

பத்திரிகைத் துறை சார்ந்த புதிய முயற்சிகளைத் தொடங்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்றும் இதில் 24 பேரை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த கூகுள் உதவுகிறது. 

இந்தத் திட்டத்துக்கான பயிற்சி செப்டம்பர் 7 முதல் நவம்பர் 5 வரை (ஒரு வார இடைவெளியுடன்) நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

அமெரிக்கர்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் கனடா நாட்டினருக்கு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →