வணிகம்

பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக சரிவுடன் தொடக்கம்

DIN


பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 5) 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிந்து  50,420 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.41 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 14,964 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.37 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டன. மற்ற 21 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகமட்சமாக இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ. ஆகியவற்றின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. ஓ.என்.ஜி.சி. 3.28 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.19 சதவிகிதமும், எம்&எம் நிறுவனம் 1.55 சதவிகிதமும் உயர்ந்து காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

SCROLL FOR NEXT