inflation074053 
வணிகம்

மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு

மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் 4.17 சதவீதமாக உயா்ந்தது

DIN

மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் 4.17 சதவீதமாக உயா்ந்தது. எரிபொருள், உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே பணவீக்க உயா்வுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.03 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணவீக்கம் 2.26 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது.

பிப்ரவரி மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 1.36 சதவீதமாக இருந்தது. இதுவே ஜனவரி மாதம் -2.8 சதவீதமாக இருந்தது. காய்கறிகள் பிரிவில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் -2.9 ஆக இருந்தது. முந்தைய மாதத்தில் அது -20.82-ஆக இருந்தது.

பிப்ரவரி மாதத்தில் எரிபொருள்கள் பிரிவில் பணவீக்கம் 0.58 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இது -4.78-ஆக இருந்தது என அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT